Monday, 26 October 2015

25-10-2015 ஞாயிறன்று  மேல்பத்து , துடையூர் அருண் வாசம் பள்ளியில் நடைபெற்ற பள்ளியின்பெயராளர் அருண்குமார் பெரியசாமியின் பிறந்தநாள் விழா நிகழ்வுகள் .படங்கள் சொல்லும் கதை

விழாவினில் கலந்துகொண்ட பெருமக்களின் கூட்டம் 
விழாவிற்கு வருகைதந்தோரை  வரவேற்கும்ம் பள்ளியின் முதல்வர்; திருமதி  சத்தியபிரியா 

விழாவின் ஒருகூறாக நடைபெற்ற பேச்சுப்போட்டியில் மாணவர் ஒருவர் உரையாற்றுகிறார் 

திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் நடுவர் மாணவர்களுக்கு  போட்டியின் விதிகளையும் நடைமுறைகளையும் விளக்குகின்றார் 

விழாவினில் போட்டிகளையும் பல்மருதுவமுகாமையும் தொடங்கிவைத்த மேல்பது ஊராட்சிமன்றத்தலைவர் திரு பாண்டியன் அவர்களுக்கு பள்ளித்தாளாளர்  பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தல் 
விழாத்தொடக்கமாக அருண் குமார்பெரியசாமியின் படத்திற்கு மாலைஅணிவித்து மரியாதை செய்தல் 
 விழாவின் அறி முக உரையினை நிகழ்த்துவது பள்ளியின் தாளாளர் முனைவர் பெ.லோகநாதன் 
பல்மருத்துவ முகாமில்  மருத்துவர் சி.ராஜேஸ்வரன் பெண்மணி ஒருவரை சோதித்து ஆலோசனை வழங்குகிறார் 

Thursday, 22 October 2015

எதிர்வரும் 25-10-2015 ஞாயிற்றுக்கிழமை துடையூர் அருண் வாசம் பள்ளியில் பள்ளியின் பெயராளர் அருண்குமார் பெரியசாமி யின் பிறந்தநாளை முன்னிட்டு உயர்நிலை  பள்ளி/ மேல்நிலைப்பள்ளி  மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி திருக்குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி  நடைபெறுகின்றன போட்டிகளில் முதல் மூன்று இடங்களை ப்பிடிக்கும் மாணவர்களுக்கு ருபாய் ஆயிரம், எழுநூற்றைம்பது ஐநூறு என்ற அளவில் ரொக்கப்பரிசுகளும் சான்றிதழ் களும் வழங்கப்படும்
பொது மக்களுக்கு இலவச பல்மருத்துவ சோதனை மற்றும் பல் பாதுகாப்பு ஆலோசனை முகாமும் நடைபெறுகிறது ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
- மக்கள் மறுமலர்ச்சி மன்றம்
 மக்கள் மறுமலர்ச்சி மன்றம் கல் வி அறக்கட்டளை
அருண் வாசம் மலையர் மற்றும் தொடக்கப்பள்ளி  

Tuesday, 6 October 2015


மக்கள் மறுமலர்ச்சி மன்றம் பெறுமையு டன்  நடத்தி ய 
24 ஆம்  ஆண்டு 
 முத்தரையர் இன மாணவர்களுக்கான 
கல்வி ஊக்கப்பாரிசளிப்பு விழா   

கடந்த 2-10-2015 ஞாயிறன்று துடையூர் அருண்வாசம்  பள்ளியில் மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் சார்பில்  நடைபெற்ற முத்தரையர் இன மாணவர்களுக்கான கல்வி ஊக் கப்பரிசளிப்பு விழா நிகழ்வுகள்  படங்களாக தரப்பட்டுள்ளன. விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன.கண்டு களியுங்கள் சொந்தங்களே.! 
  

படம் : ரூபாய் 10 ஆயிரம் கல்வி ஊக்கதொகை பெறு ம்  பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர் எ.சேகர் திருக்குவளை அரசு பொறியியல் கல்லூரியில் இவ்வாண்டு சேர்க்கை பெற்றமாணவர்.இவ்வாண்டு நம் மன்றம் அளித்த ஊக்கப்பரிசினையும் பெற்றுள்ளார்.. இவர் முன்னரே தாம் பத்தாம் வகுப்பில்  நல்ல மதிப்பெண்கள் பெற் ற மைககாக ஊக்கப் பரிசு பெற்றவர்.
படம் : மன்னர் சிலையை நினைவு பரிசாக வழங்கும் சிற்பக்கலைஞர் திரு ராஜரெத்தினம்  பெயி ண் டராக வேலை பார்த்துவரும் திறமைமிக்க கலைஞர் இவர் குருவம்பட்டியில் வசித்து வருகிறார்.நம் பள்ளியின் சுவற்றில் பள்ளியின் இலட்சினையை  ஓவியமாக வரைந்தவர்..இவர் நம் மன்றத்தி ன்  புரவலர்  
படம் : பள்ளிக்கட்டிடநிதியாக ருபாய் 5 லட்சம் வழங்குவதாக அறிவிக்கும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றசங்கத்தின் மாநிலத்தலைவர் அய்யா ஆர் விஸ்வநாதன் அவர்கள் 
படம் : பள்ளியின் கட்டிட நிதியாக ருபாய் 25 ஆயிரம் வழங்கும் பொறிஞர் க .நாகராஜன் மற்றும் அன்னாரது துணைவியார் திருமதி பானுமதி அம்மையார். கோவையில் முதன்மைப்பொறி யாள ராக ப்ப ணி யாற்றி  பணிநிறைவு செய்த பண்பாளர் .மன்றத்தின் புரவலர்.
படம் :.பள்ளிக்கட்டிடநிதியாக ருபாய் 25 ஆயிரம் வழங்கியதமிழ்நாடு நகர் ஊரக த்துறை இணை இயக்குனாராகப் பணியாற்றி பணி  நிறைவு செய்துள்ள   பொறிஞர் தியாகராஜன் அவர்கள்.
படம் : நிகழ் ச் சியில் நடனம் ஆடி அய்யா ஆர்.வி அவர்களிடம் தலா ருபாய் ஆயிரம் பரிசு பெற்ற அருண்  வாசம் பள்ளி 5 ஆம்  வகுப்பு மாணவிகள். 

கல்வி ஊக்க முதல் பரிசாக 2  கிராம் தங்க நாணயம் பெறும் மாணவி   
சிறப்புற நடைபெற்ற இவ்வரிய விழாவினை காண இயலாத எம் சொந்தங்களின்  பார்வைக்கு இப்படங்கள்.நன்றி சொந்தங்களே !எங்களுடன் இணை ந்து இனப்பணியாற்ற வாருங்கள் உற வுகளே !

Saturday, 3 October 2015

கதை சொல்லும் படங்கள் 
திருச்சிராப்பள்ளி மக்கள் மறுமலர்ச்சி ம ன்ற  ம் அக்டோபர் 2 ஆம் நாள் முத்தரையர் இன மாணவர்களுக்கான கல்வி ஊக்கப்பரிசளிப்பு விழாவினை துடையூர் அருண் வாசம் பள்ளி வளாகத்திலுள்ள மன்னர் திருமங்கை ஆழ்வார் கலைஅரங்கில் மிகச்சிறப்பாக கொண்டாடினர் .. அவ்விழாவின் சிறப்புக்களை கீழ் வரும் படங்கள் விளக்குகின்றன 
அக்டோபர் 2 ஆம் நாள் நடைபெற்ற கல்வி பரிசளிப்பு விழாவில் தலைமைஆசிரியர் என் பெரியசாமி அவர்களும் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தமிழ்  செல்வி அவர்களும் அய்யா ஆர்.வி முன்னிலையில் பள்ளி வளர்ச்சிக்கென ரூபாய்  25 ஆயிரதிற் கான காசோலையை பள்ளியின் தாளாளர் முனைவர் பெ.லோகநாதன் அவர்களிடம் வழங்குகின்றனர் 
அக்டோபர் 2 ஆம் நாள் கல்வி பரிசளிப்பு விழாவிற்கு முன்பதாக திருச்சி முத்தரையர் சதுக்கத்தில் அமைந்துள்ள பே ரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மன்ற மறவர்கள் துணைத்தலைவர் மு.சேரலாதன் கல்வி அறக்கட்டளைச் செயலாளர் ஆசிரியர் க.மாரிமுத்து பொருளாளர் இரவிச்சந்திரன் ஆகியோர் 
முதல் பரிசாக வழங்க இருக்கும் 2 கிராம் தங்க நாணயங்கள் இரண்டினை அய்யா ஆர்.வி.முன்னிலையில் மன்றத்தலைவர் முனைவர் பெ.லோகநாதன் அவர்களிடம் டோல் கேட் சண்முகா மெடிகல்ஸ் உரிமையாளர் திரு வடிவேல் அவர்கள் வழங்குகின்றார்.
விழா நினைவாக அருண் வாசம் பள்ளிக்கு சிற்பக்கலைஞர் திரு ,இராசரெத்தினம் அவர்கள் தாம் வடித்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலையினை அய்யா அவர்களின் முன்னிலையில் தலைவர் முனைவர் பெ.லோகனா தனிடம் வழங்குகிறார்.
அக்டோபர் 2 ஆம் நாள் நடைபெற்ற கல்வி பரிசளிப்பு விழாவில் முன்னாள் முதன்மை பொறியாளர்  திரு க.நாகராசன் -பானுமதி தம்பதியர்  அய்யா ஆர்.வி முன்னிலையில் பள்ளி வளர்ச்சிக்கென ரூபாய்  25 ஆயிரத்திற் 
கான காசோலையை பள்ளியின் தாளாளர் முனைவர் பெ.லோகநாதன் அவர்களிடம் வழங்குகின்றனர் 

அக்டோபர் 2 ஆம் நாள் கல்வி பரிசளிப்பு விழாவிற்கு முன்பதாக திருச்சி முத்தரையர் சதுக்கத்தில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு துணைத்தலைவர் பொறிஞர் பெ.அரவரசன்  அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய  மன்றத்தலைவர் முனைவர் பெ.லோகநாதன்  மற்றும் பொதுச்செயளாலர்  வழக்குரை ஞர் க.செல்வராசு அவர்கள் உடனுள்ளனர்.