Thursday, 24 September 2015

வருகின்ற 2-10-2015 வெள்ளியன்று திருச்சி மக்கள் மறுமலர்ச்சி மன்றம் முத்தரையர் மாணவர்களுக்கான ஊக்கப்பரிசளிப்பு விழாவினை துடையூர்  அருன்வாசம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மன்னர் திருமங்கை ஆழ்வார் கலையரங்கத்தில் சிறப்பாக நடத்திட உள்ளது. இவ்வாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு போதுதேர்வில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு நடத்தப்படும் இவ்விழாவில் அமைச்சர் மாண்புமிகு டி.பி.பூனாட்சி அவர்களும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தலைவர் திரு ஆர். விஸ்வநாதன் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.இன முன்னோடிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கும் இவ்விழாவினில் 350 மாணவர்கள் பரிசு பெற இருக்கின்றனர் , தாங்களும் கலந்துகொண்டு பரிசு பெரும் மாணவர்களை வாழ்த்திடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்..முதல் பரிசு 2 கிராம் தங்க நாணயம்  இரண்டாம் பரிசு 1 கிராம் தங்க நாணயம் மூன்றாம் பரிசு 25 கிராம் வெள்ளி தம்ளர்  விண்ணப்பித்துள்ள அணைத்து மாணவர்களுக்கும்  ஆறுதல் பரிசும்  சான்றிதழும் வழங்கப்படும். உறவினர்களும் மன்ற உறு ப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க ஒத்துழைக்க வேண்டுகிறோம். 
முத்தரையர்  இளைஞர்களே விதைகளாய் விழுங்கள்! வெற்றி விருட்சங்களாய் எழுங்கள் என்ற தலைப்பில் எழுச்சி உரையும்நிகழவிருக்கின்றது  

No comments:

Post a Comment