Tuesday, 30 June 2015

இராமேஸ்வரத்தில் முத்தரையர்  இன மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கபரிசளிப்பு விழாவும் குருதி கொடை வழங்கிய கொடையளர்களுக்கு பாராட்டு விழாவும் கடந்த 27-6-2015 ஞாயிறன்று நடைபெற்றது. 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்  பரிசுகள் பெற்றனர். 
இரண்டாம் ஆண்டு எம் ஏ  ஆங்கில இலக்கியம் பயி லும் செல்வி கலைவாணி  1000க்கும் மேற்பட்ட நெற்றித்திலகங்களை சேகரித்து இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் தமிழ்நாடு புக் ஆப் ரெகார்ட்ஸ் ஆகியவற்றில் சாதனை பதிவு பெற்றுள்ளார். அவர் வெற்றியின் வேகம் என்ற கட்டுரை நூலினையும் எழுதியுள்ளார். மேடைபே ச்சாள ரகவும் வர்ணணையாள ராகவும் கவிதைபடைப்பாளியும் ஆக பல்வேறு திறன்களை பெற்றிருக்கும் செல்வி கலைவாணியும் அன்று பாராட்டி பரிசுகள் வழங்கப்பெற்றார் . இதனை ஏற்பாடு செய்திருந்த இராமேஸ்வரம் முத்தரையர் கல்வி மற்றும் சமூக மேம்பட்டு இயக்கத்தினர் பராடுதலு க்குரியவர்களே. 

No comments:

Post a Comment