Thursday, 24 September 2015

வருகின்ற 2-10-2015 வெள்ளியன்று திருச்சி மக்கள் மறுமலர்ச்சி மன்றம் முத்தரையர் மாணவர்களுக்கான ஊக்கப்பரிசளிப்பு விழாவினை துடையூர்  அருன்வாசம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மன்னர் திருமங்கை ஆழ்வார் கலையரங்கத்தில் சிறப்பாக நடத்திட உள்ளது. இவ்வாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு போதுதேர்வில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு நடத்தப்படும் இவ்விழாவில் அமைச்சர் மாண்புமிகு டி.பி.பூனாட்சி அவர்களும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தலைவர் திரு ஆர். விஸ்வநாதன் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.இன முன்னோடிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கும் இவ்விழாவினில் 350 மாணவர்கள் பரிசு பெற இருக்கின்றனர் , தாங்களும் கலந்துகொண்டு பரிசு பெரும் மாணவர்களை வாழ்த்திடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்..முதல் பரிசு 2 கிராம் தங்க நாணயம்  இரண்டாம் பரிசு 1 கிராம் தங்க நாணயம் மூன்றாம் பரிசு 25 கிராம் வெள்ளி தம்ளர்  விண்ணப்பித்துள்ள அணைத்து மாணவர்களுக்கும்  ஆறுதல் பரிசும்  சான்றிதழும் வழங்கப்படும். உறவினர்களும் மன்ற உறு ப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க ஒத்துழைக்க வேண்டுகிறோம். 
முத்தரையர்  இளைஞர்களே விதைகளாய் விழுங்கள்! வெற்றி விருட்சங்களாய் எழுங்கள் என்ற தலைப்பில் எழுச்சி உரையும்நிகழவிருக்கின்றது  

Friday, 11 September 2015

அன்பு உறவுகளே !
நாளை 13/9/2015 ஞாயிறன்று திருச்சி வரகனேரி த செமு உயர்நிலைபள்ளி   வளாகத்தில் காலை 10.30 மணி அளவில் மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் மாதப்பொதுக்குழு க்கூட்டம்  நடைபெற  இருக்கின்றது.. மன்ற உறுப்பினர்களும் உறவினர்களும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க
வேண்டுகிறோம்.
             எதிர்வரும் 2-10-2015 வெள்ளிகிழமையன்று துடையூர் அருண்வாசம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி  வளாகத்தில் அமைந்துள்ள மன்னர் திருமங்கை ஆழ்வார் கலை அரங்கத்தில்  யில் மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் சார்பில்  இவ்வாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில்  தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கப்பரிசளிப்பு விழா  நடைபெறுகிறது தகுதிஉள்ள மாணவர்கள் 20-09 2015க்குள் விண்ணப்பித்து பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.-விவரங்களுக்கு அலைபேசி எண் 9443494866 ஐ தொடர்பு கொள்ளவும்.
படத்தில்  விழா நடைபெற இருக்கும் கலைஅரங்கம் 

Thursday, 3 September 2015

ஆசிரியர் தின விழா 
அன்பு உறவினர்களே  ! 
நமது அருண்வாசம் மழலையர் மற்றும் தொடக்க ப் பள்ளியில் நாளை 4-9-2015 ஆம் நாள் காலை 11 மணிக்கு ஆசிரியர்தின விழா  சிறு காம்பூர் ஆரம்ப சுகாதர நி லை ய மருத்துவர்  திருமதி செண்பகாதேவி அவர்கள் சிறப்புரையாற்ற பள்ளியின் தாளாளர்  முனைவர் பெ.லோகநாதன் அவர்கள் தலைமைதாங்க வெகு சிறப்புடன் நடைபெறவுள்ளது..பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும்  மக்கள் மறுமலர்ச்சி மன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு ஆசிரியர்களை  பெருமைபடுத் துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.  
 
எமது மதிப்பிற்குரிய ஆசிரிய ப்பெருமக்கள்