Friday, 22 May 2015

17/5/2015 ஆம் நாள் நடைபெற்ற பேரரசரின் பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக மன்னரின் திருஉ ரு வச்சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதனைத்தொடர்ந்து விழா அரங்கத்தின் வாயிலில் மன்றத்தின் கொ டி  ஏ ற்றப்பட்டது .பொறிஞர் அரவரசன் அவர்கள் கொடி 
ஏற்றி னார்  
பேராசிரியை முனைவர் மணிமேகலை அவர்கள் மங்கலதீபம் ஏற்றிவைத்து விழாவினை துவக்கிவைத்தர்கள்.


பேராசியர் முனைவர் பெ.  சுப்பிரமணியன் அவர்கள் எண்ணச்சிறகுகளை விரிப்போம் இலக்கு நோக்கிப்பற ப்போம் என்ற விழா மலரை வெளியிட்டார்  

Monday, 18 May 2015


பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1340 ஆவது  பிறந்தநாள் விழா 
நேற்று 17-5-2015  ஞாயிற்றுக்கிழமை திருச்சி புத்தூர் 4 ரோடில் உள்ள ஸ்ரீ சண்முகா  திருமண மண்டபத்தில் மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் சார்பில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1340 ஆவது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
காலை 9,30 மணிக்கு அரி யமங்கலம்  திரு அ .செல்வராசு அவார்கள் மன்னர் சிலைக்கு மாலை அணிவிக்க  மன்றத்தினர் பேரரசருக்கு மரியாதை செலுத்தினர்.  கலை 10 மணிக்கு ஸ்ரீ சண்முகா திருமணமண்டபத்தின் வாயிலில் மன்றத்தின் கொ டி யை த்து பொறிஞர் அரவரசன் அவர்கள் ஏற்றிவைத்தார். மங்கலதீபத்தினை திரு டி ஆர் செல்வராஜ், திரு வி.ராமசாமி, முனைவர் செந்தமிழ் செல்வி முனைவர் மு.மணி மேகலை  திருமதி கலையாழி சிறுமணி ஆகியோர் ஏற்றி வைத்து விழாவினை துவக்கி வைத்தனர். மன்றத்தின் தலைவர் முனைவர் பெ. லோகநாதன் அவர்கள் தலைமையில் எண்ணச்சி ற குகளை விரிப்போம்  இலக்கு நோக்கிப்பற ப்போம்  எனும் மையக்கருத் தினில் கருத்துக்களமும் -கவிக்களமும் .என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . அதனில் ஆசிரியர் தஞ்சை ஆர்.செல்வராசு  ஆசிரியர் பெ.இராமலிங்கம் ஆன்மிகச்சு டர்  உறுதிமொழி மா கோவிந்தராஜன் ஆகியோர் கருத்துப்பொ ழிவுகளை வழங்கினர். .கவிஞர்கள் கொட்டப்பட்டு சக்திவேலனார், வள ப்பக்குடி ஆனந்தன் ப.கோபிநாத் முனைவர் ப.விஜயக்குமார் மக்கள் க விஞர் மாரியப்பன் ஆகியோர் கவிதைகளைபொ ழி ந்தனர்.
எண்ணச்சிறகுகளை விரிப்போம் இலக்குநோக்கிபற ப்போம் எனு ம்  விழா மலரினை முனைவர் பெ.சுப்பிரமணியன் வெளியிட முனைவர் மு.மணிமேகலை, ஆசிரியர்  ராமசாமி  மேக்னம் ஆட் டோஸ் திரு  செந்தில் ஆகியோர் படிகளைப்பெற்றுகொண்டனர்.
12 முத்தரையர் பெருமக்களுக்கு முத் தரையர் செம்மல் என்ற விருதினை திரு கா ந்திபித்தன் அவர்கள் வழங்கினார் .பேராசிரியர் சாமிமுத்து அய்யா அவர்கள்  வாழ்த்துரை வழங்கினார்.

சிலம்பக்கலை  வீரர் கிரிஷ்ணராயபுரம் த .ராஜா அவர்களுக்கு திரு செ .எழில்மாறன் அவர்கள் முத்தரையர் சிலம்பக்கலை செல்வன் என்ற விருதினை வழங்கிப்பாராட் டினார். மன்றத்தின் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் க  செல்வராசு நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

Wednesday, 13 May 2015

அன்பு சொந்தங்களே! வ ருகின்ற 17-5-2015 ம்; நாள் ஞாயிற்றுக்கிழமை திருச்சி புத்தூர் 4 ரோடு ஸ்ரீ சண்முக திருமண மண்டபத்தில் முற்பகல்  10 மணி அளவில் மன்றத்தலைவர் தலைமை யில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள்  விழா கொண்டாடபடஇருக்கின்றது. முத்தரையர் சான்றோர் பெருமக்கள்  கருத்துக்களமும் கவிக்களமும் வழங்க இருக்கின்றனர் .13 முத்தரையர் பெருமக்கள்  முத்தரையர் செம்மல் விருது பெற இருக்கின்றார்கள் நமது சிலம்பக்கலை  வீரர் த .ராஜா  சிலம்பம்  விளக்கக்காட்சி ஒன்றினை காட்சிபடுத்த இருக்கின்றார். தங்களது பெருமைமிகு வரவினை எதிர்பார்க்கிறோம்   .  

Friday, 1 May 2015

அன்பு உறவுகளே !எதிர்வரும் 17-5-2015 ஞாயிறன்று மக்கள் மறுமலர்ச்சி மன்றம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1340 ஆவது பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடவிருக்கின்றது. உறவினர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.திருச்சிராப்பள்ளி புத்தூர் 4 ரோடு சண்முகா  திருமணமண்டபத்தில் நடைபெறவிருக்கும் இவ்விழவினில்
எண்ணச்சிறகுகளை விரிப்போம் இலக்கு நோக்கி பறப்போம் எனும் மையக்கருத்தில் காருத்துக்கள மும் -கவிக்கள மும் நிகழவிருக்கின்றது. திரு அம்பலத்தரசு , தஞ்சை ஆசிரியர் ஆர் . செல்வராசு, ஆன்மிகச்சுடர்  மா.கோவி விந்தராசு  ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். கவிஞர் கொட்டப்பட்டு சக்திவேலனார், மக்கள் கவிஞர் மாரியப்பன், ஆசிரியர் வள ப்பக்குடி ஆனந்து கவிஞர் முனைவர்  ப.விஜயக்குமார்  கவிஞர் கோபிநாத் ஆகியோர் கவிக்கள த்தில் கவிமுழக்கம் செய்கின்றனர். 13 முத்தரையர் பெருமக்களுக்கு முத்தரையர் செம்மல் எனும் விருதுகள்  வழங்கப்பட இருக்கின்றன . நம் இன மறவர் தற்காப்புகலை  வீரர் சிலம்பக்கலை ச்செல்வன் விருது பெரும் கிருட் டிண ரா யபுரம் செல்வன் த .ராசா, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர் சிலம்ப க்கலை  காட்சிபடுத்த இருக்கின்றார். உறவுகளே வருக.