Saturday, 28 March 2015


அன்பு உறவினர்களே
எதிர்வரும் 31-3-2015 ஆம் நாள் மக்கள் மறுமலர்ச்சி மன்றம் கல்வி அறக்கட்டளை நடத்தி வரும் அருண்வாசம் மழலையர்  மற்றும் தொடக்கப்பள்ளியின் முதலாவது ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மன்னர் திருமங்கை ஆழ்வார் கலை அரங்கத்தில் சிறப்புற நடை பெற இருக்கின்றது உறவினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் 

Thursday, 12 March 2015

2015 மார்ச்சு திங்கள் பொ துக் குழு க்கூட்டம் 

திருச்சி வரகனேரி த செ மு உ யர் நிலைப்  பள்ளி வளாகத்தில் தலைவர் முனைவர் பெ.லோகநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் மறுமலர்ச்சி மன்றகூட்டதில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாள் விழாவினை மே மதம் இரண்டாம் ஞாயிரன்று நடைபெறும் பொதுக் குழு கூட்டத்துடன் சேர்ந்து நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது. .
உலகமகளிர் நாளினை ஒட்டி மன்றத்தின் புரவலர் திருமதி நீலா வீரசேகர் அவர்கள் பொன்னாடை அணிவித்து பாரா ட்டப் பெற்றார் .கூட்டத்தில் உறுதிமொழி மா  கோவிந்தராசனார்  அவர்கள் சிறப்புரை ஆற்றினார் .அன்னாருக்கு பொதுச் செயலாளர் வழக்குரைஞர் க .செல்வராசு அவர்கள் நினைவுப் பரிசினை வழங்கி சிறப்பு செய்தார்
                                            மன்றத்தலைவர் உரையாற்றுகிறார்.
 திருமதி நீலா வீரசேகர் பொன்னாடை அணிவித்து பாரட்டப் படுகிறார்
  
உறுதிமொழி மா.கோவிந்தராசனார்  அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கபடுகிறது 

அகில இந்திய கோலிகள் சமாஜத்தில் மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் குரல் 
கடந்த பெப்ருவரி 22 ஆம்  நாள்  பெங்களுருவில் நடைபெற்ற அகில இந்திய கோலிகள்  செயற்குழு கூட்டத்தில் நமது மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் சார்பில் பார்வையாளராக மன்றத்தின் தலைர்  முனைவர்   பெ.லோகநாதனும் துணைத்தலைவர் திரு பெ.தனபால் அவர்களும் கலந்து கொண்டனர். முனைவர் பெ. லோகநாதன் அவர்கள் மன்றத் தைப் பற்றியும்  தமிழகத்தில் முத்தரையர் நிலைப்   பற்றியும் எடுத்துரைத்தார்.