Sunday, 7 December 2014

சமுதாயக்கேடுகளுக்கு எதிரான குழந்தைகள் பேரணி

அருண்வாசம் மழலையர் பள்ளி இவ்வாண்டு குழந்தைகள் தினவிழாவினில்
சமுதாயக்கேடுகளான புகைபிடித்தல் மது அருந்துதல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான மழலையர் பேரணி ஒன்றினை எண்1 டோல்கேட் அரிமாசங்கம - டெம்பிள் சிட்டி அரிமா சங்கத்துடன் இணைந்து சிறபபாக நடதத்தியது. அம்மழலையர்பேரணியின் படங்களைக் காண்க.



Saturday, 6 December 2014

முத்தரையர் மன்னர் திருமங்கை ஆழ்வார் கலையரங்கத்திறப்புவிழா

2014 அக்டோபர் 25 ல் மக்கள் மறுமலர்ச்சி மன்றம் கல்வி அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்று வரும் துடையூர் அருண்வாசம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வளாகத்தில்  ரூ 5 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள முத்தரையர் மன்னர் அருளாளர் திருமங்கை ஆழ்வார் கலையரங்கம் பெங்களுரு வருமான வரி துணைஇயக்குநர் திரு திவாகரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அது சமயம் கலையரங்கத்தினை நிறுவுவதற்கு ரூ 25 ஆயிரம்  கொடையளித்த கொடையாளிகளின் புகைப்படங்களும் அரங்கத்தில் திறந்து வைக்கப்பட்டன. அரங்கத்தின் பணிகள் முழுமையுற அன்பர்களிடமிருந்து கொடைகள் வரவேற்கப்படுகின்றன.
முனைவர் பெ.லோகநாதன்  தலைமையுரை ஆற்றுகிறார் 

அருண்வாசம் பள்ளித்திறப்புவிழா

மக்கள் மறுமலர்ச்சி மன்றம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்  துடையூரில் தொடங்கியுள்ள அருண்வாசம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி. பள்ளியின் திறப்புவிழாவினில்  திறப்பாளர் மாண்புமிகு தமிழக கதர் மற்றும் ஊரகத்தொழில்கள் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி அவர்களுக்கு மன்றத்தின் தலைவர் முனைவர் பெ.லோகநாதன் அவர்கள் பொன்னாடை அணிவித்து மகிழ்கிறார்



தற்பொழுது  110 மாணவ-மாணவியர் பயிலும் இப்பள்ளி  முத்தரையர் சமுதாயத்தின் சார்பில் தோற்றுவிக்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம்.இதன் வளர்ச்சியில் பங்குபெற உங்களை அன்புடன் அழைக்கிறோம்  
முத்தரைய உறவுகளுக்கு எங்களது அன்பான வணக்கம்.
திருச்சியிலிருந் து இயங்கி வரும் நம் சமுதாய முன்னேற்றத்திற் கான இவ்வமைப்பில் சேர உங்களை அன்புடன் அழைகின்றோம். நாங்கள் எடுக்கும் முயற்சியில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். நாமும் முன்னேறுவோம் நம் சமுதாயத்தையும் முன்னேற்றுவோம்.
கடந்த அக்டோபர் 2 ஆம் நாள் கல்விப்பரிசளிப்புவிழா விழாவினில் கலந்துகொள்ள வருகைதரும் மன்ற உறுப்பினர்களும் உறவினர்களும் மாணவர்களும் விழா மண்டப முகப்பில்.

பேரரசரின் பெருமை போற்றும் பிறந்தநாள் விழா

மன்னர் பிறந்தநாள் விழாவினில் மக்கள் மறுமலர்ச்சிமன்றத்தின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும். மன்னரை வணங்கி மாண்புறும் காட்சி..

மக்கள் மறுமலர்ச்சி மன்றம்

மக்கள் மறுமலர்ச்சி மன்றம்  திருச்சிராப்பள்ளி 
நீங்கள் காண்பது நம் மக்கள் மறுமலர்ச்சி மன்றம் தொடங்கியுள்ள மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் தோற்றம்.
தற்பொழுது  110 மாணவ-மாணவியர் பயிலும் இப்பள்ளி  முத்தரையர் சமுதாயத்தின் சார்பில் தோற்றுவிக்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம்.இதன் வளர்ச்சியில் பங்குபெற உங்களை அன்புடன் அழைக்கிறோம்.